Sunday, 19 June 2011

அரிசி பால் பாயசம் ஜாமுன்

     
அரிசி பால் பாயசம் ஜாமுன்
தேவையானவை : கோவா- அரை  கப் , மைதா - 1 ஸ்பூன்,பால் - 1 லிட்டர் ,அரிசி -1 கப் ,சக்கரை - கால் கப் , பனை  வெல்லம்-2 கப் , எண்ணெய்- தேவையான அளவு .

செய்முறை :  அரிசியை  கழுவி ஒரு மணி  நேரம்  ஊற விடவும் . பாலை நன்றாக  கொதிக்க  வைக்கவும் . ஊறிய அரிசியை வடி கட்டி அதில் சேர்க்கவும் . நன்றாக குலைய  வெந்ததும் பனை  வெல்லம்  சேர்த்து கரையும் வரை  கொதிக்க விடவும் .(பாயசம் ரெடி). 
 கோவாவுடன்  மைதா மாவை சேர்த்து  பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும் . கடாயில் சக்கரையை கொட்டி ,ஒட்டும் பதத்தில்  பாகு வைத்து  அதில் பொறித்த உருண்டைகளை  ஊற போடவும். குலோப் ஜாமுன்  ரெடி ! 

கப்பில் பாயசத்தை ஊற்றி, அதன் மேல் குலோப் ஜாமுன் போட்டு பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More